நெல்லை: நெல்லையில் ஆபாச படம் திரையிடப்பட்ட வழக்கில் நடிகை ஷகீலா நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாரானார். நீதிமன்றத்தில் அவரிடம் ரகசிய வ...
நெல்லை: நெல்லையில் ஆபாச படம் திரையிடப்பட்ட வழக்கில் நடிகை ஷகீலா நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாரானார். நீதிமன்றத்தில் அவரிடம் ரகசிய விசாரணை நடந்தது.
கடந்த 2003ம் ஆண்டு பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள ஒரு திரையங்களில் ஆபாச படம் காட்டப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக திரையரங்கு உரி்மையாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவம், ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ், நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திரையரங்கு மேலாளர் பாஸ்கரன் வழககில் ஆஜாராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
கடந்த 2009ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் உள்பட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி (நேற்று) ஆஜாராக சம்மன் அனுப்பப்பட்டது.
சம்மனை பெற்றுக் கொண்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ், ஆபரேட்டர் பரமசிவன், திரையங்கு ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 9 பேர் நேற்று நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதையடித்து நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் ரகசிய விசாரணை செய்தார். பின்னர் வழக்கை பிப்ரவரி 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Comments
Post a Comment