திரைக்கு வருகிறான் எல்லாளன்!

எல்லாளன்! ஈழத் தமிழ மன்னர்களில் முக்கியமானவன். அவனது பெயரில் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தாக்குதலும் முக்கியமானது. 21 கரும்புலிகள்  இன்னுயிர் ஈந்து, சிறிலங்கா அரச படைகளை அதிர வைத்த தாக்குதல்.

இந்த தாக்குதலை மூலக்கருவாகவும், போராளிகளின் உணர்வுகளோடினைந்த கிளைக் கதைகளையும் கொண்டு உருவான இத் திரையோவியத்தில் நடித்தவர்களும் போராளிகளே.  வன்னிப் பெரு நிலப்பரப்பில். 2008ம் ஆண்டு பிற்பகுதியில்  படப்பிடிப்புச் செய்யப்பட்டு, ஏனைய வேலைகள் நடந்த வருடத்தில் முடிந்து, படம் வெளியிடத் தயாராகியிருந்த நிலையில் யுத்தம் வெடித்து பெரும் அனர்த்தங்கள் நிகழ்ந்திருந்தன.

தற்போது இத்திரைப்படம்,  போராளிகளின் தியாக வரலாற்றினைப் பதிவு செய்யும் சினிமாவாக வெளிவந்திருக்கிறது.  கடந்த 06.01.10 ல் ,  கனடா ரொறன்ரோ நகரில் எல்லாளன் முதற்காட்சியாக, ஊடகவியலாளர்ள்,  மற்றும் பிரமுகர்களுக்குசிறப்புக் காடம்சியாகக் காண்பிக்கப்படதாக கனடாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து கனடாவில் தமிழ்மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்கும் இத் திரைப்படம், உலகெங்குமுள்ள தமிழமக்களை நாடி விரைவில் வெளிவரவுள்ளதாக, திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றன.

Comments

Most Recent