சினேகாவை விடாத செல் தொல்லை!

Sneha
நடிகை சினேகாவை வைத்துப் படமெடுக்கிறேன், காதலிக்கிறேன் என்று பினாத்திக் கொண்டு சில மாதங்களுக்கு முன் ஒருவர் கைதாகி கம்பி எண்ணினாரே ராகவேந்தர்... நினைவிருக்கிறதா?

பாளையங்கோட்டை சிறையில் காலம் தள்ளியும் கூட இந்த பார்ட்டி அடங்குவதாக இல்லை.

பெங்களூரைச் சேர்ந்தவர் ராகவேந்தர். தன்னை ரியல் எஸ்டேட் பெரும்புள்ளி என்று சொல்லிக் கொண்டு, சினேகாவை வைத்து சினிமா தயாரிப்பதாக அணுகியுள்ளார். அதன் பின்னர் அவர் நோக்கம் சினிமா தயாரிப்பது இல்லை, சினேகாவிடம் வழிவதுதான் என்று தெரிய வந்தது.

அவரது தொல்லைகள் போனில் தொடர்ந்ததால், போலீசாரிடம் புகார் செய்தார் சினேகா. சென்னை கமிஷனர் ராஜேந்திரன் தந்திரமாக பொறி வைத்து ராகவேந்திராவைப் பிடித்து சிறையில் தள்ளினார்.

பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோதும் கூட, சினேகாவைப் பற்றி பேசிக் கொண்டும், அவருக்கு பல லட்சம் பரிசளித்த கதைகளைக் கூறிக் கொண்டுமிருந்தார் ராகவேந்தர்.

ஒருவழியாக சிறையிலிருந்து ஜாமீனில் வெளியேறினார். இப்போது மீண்டும் செல்போனில் தொல்லை கொடுத்த வண்ணம் உள்ளாராம்.

சினேகா, அவரது அப்பா, உறவினர்கள் என அனைவருக்கும் போன் செய்து சினேகாவைக் காதலிப்பதாகக் கூறுகிறாராம்.

இவருக்கு பயந்து 3 முறை நம்பர்களை மாற்றியுள்ளாராம் சினேகா. ஆனால் எப்படியோ அந்த நம்பர்களைக் கண்டுபிடித்து தனது செல்போன் விடு தூதைத் தொடர்கிறாராம்... காதல் எஸ்எம்எஸ்கள் அனுப்பியபடி உள்ளாராம்.

9900699946 என்ற எண்ணிலிருந்துதான் தனக்கு இத்தனை தொல்லைகளையும் தருகிறார் ராகவேந்தர் என்று புலம்புகிறார் சினேகா.

அநேகமாக மீண்டும் ஒரு அரெஸ்ட் சம்பவத்தை ரசிகர்கள் பார்க்கக் கூடும்!

Comments

Most Recent