தனது நீண்ட நாள் காதலரான ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார் என்று தன்னைப் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் ஜெனிலியா. மகாராஷ...
தனது நீண்ட நாள் காதலரான ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார் என்று தன்னைப் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் ஜெனிலியா.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக் - நடிகை ஜெனிலியா காதல் ஊரறிந்தது.
2003-ல் ரிதேஷும் ஜெனிலியாவும் 'துஜே மேரி கஸம்' இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு ரிதேஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது சமாதானமாகி பச்சைக் கொடி காட்டிவிட்டனராம்.
இதனை ஜெனிலியாவும் மறுக்கவில்லை. நாங்கள் வித்தியாசமான காதலர்கள் என்று கூறிவந்தனர். இருவரும் கிட்டத்தட்ட சேர்ந்து வசிக்கின்றனர் எனும் அளவு நெருக்கமாம்.
மும்பையின் பாலி ஹில்ஸ் பகுதியில் ஒரு வீடு கூட வாங்கியிருக்கிறார்களாம்.
இதையடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன.
ஆனால் இதனை கடுமையாக மறுத்துள்ளார் ஜெனிலியா.
"நாங்கள் காதலிப்பது உண்மைதான். வீடு வாங்கியிருப்பதாக சொல்வதையும் மறுக்கவில்லை. ஆனால் திருமணம் செய்து கொள்வதாக நாங்கள் சொல்லவே இல்லை. அது பொய்யான செய்தி" என்கிறார்.
ஓ இதுதான் அந்த வித்தியாசமான காதலா!
Comments
Post a Comment