நாம் முன்பே சொன்னதைப் போல, பொங்கல் பட பட்டியலிலிருந்து பின் வாங்கியிருக்கும் முக்கியமான படம் குறித்த செய்தி இது. அந்தப் படத்தின் பெயர் இரும்...
நாம் முன்பே சொன்னதைப் போல, பொங்கல் பட பட்டியலிலிருந்து பின் வாங்கியிருக்கும் முக்கியமான படம் குறித்த செய்தி இது.
அந்தப் படத்தின் பெயர் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.
லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா, லட்சுமி ராய் நடித்துள்ள, ஓரளவு எதிர்ப்பார்ப்புடன் கூடிய இந்தப் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வந்துவிடும் என கூறப்பட்டது.
விளம்பரங்களும் அப்படித்தான் வெளியாகின. ஆனால் இப்போது கடைசி நிமிடத்தில் பின்வாங்கியுள்ளது.
காரணம்...
படத்தை முதலில் தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த கல்பாத்தி அகோரம், இப்போது இந்தப் படத்தை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்று விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே படத்தை கொஞ்சம் நிதானமாக வெளி விட்டால், பள்ளிக்கூட விடுமுறை கலெக்ஷனையும் பார்த்துவிடலாம் என்ற திட்டம் போலிருக்கிறது.
எனவே இப்போது பொங்கல் படங்களின் லிஸ்டில் ஒன்று குறைந்துவிட்டது. பொங்கலுக்கு குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம் மற்றும் போர்க்களம் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே. இது இன்றைய நிலவரம் மட்டுமே!
Comments
Post a Comment