கவர்ச்சியை தவிர்க்கும் 'தூத்துக்குடி' கார்த்திகா!கவர்ச்சியாக நடித்துத்தான் கல்லாவை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று தைரியமாக பேசுகிறார் தூத்துக்குடி புகழ் கார்த்திகா.

தூத்துக்குடிக்குப் பிறகு பல படங்களில் கார்த்திகா நடித்து விட்டார். ஆனாலும் இன்னும் பிரேக் இல்லை.

தூத்துக்குடியில் தனக்கு ஜோடியாக நடித்த ஹரிக்குமாருடன், மதுரை சம்பவம் படத்தில் 2வது முறையாக ஜோடி சேர்ந்தார். இப்படத்தில் அனுயாவுக்கு நல்ல பெயர் கிடைத்து அவர் தட்டிச் சென்று விட்டார்.

தனி நாயகியாக நடித்தாலும் சரி, 2வது நாயகியாக நடித்தாலும் சரி கவர்ச்சிகரமாக மட்டும் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ளாராம் கார்த்திகா.

தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளைத் தரம் பிரித்து, தனக்கு உகந்த மாதிரியான ரோல்களாகப் பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார் கார்த்திகா.

கவர்ச்சியாக நடிக்குமாறு பலரும் இவரை உசுப்பேற்றி வருகிறார்களாம். ஆனால் அப்படி நடிக்க நான் விரும்பவில்லை. குடும்பப் பாங்கான நடிகைகளுக்குத்தான் நீண்ட காலம் மக்கள் மனதில் இடம் இருக்கும்.

சிலர் கவர்ச்சியாகவும், குடும்பப் பாங்காவும் நடிக்கிறார்கள். ஆனால் எனக்கு குடும்பப் பாங்கான ரோல்கள்தான் பொருத்தமானவை, அந்த ரோல்களிலேயே நடிக்க விரும்புகிறேன். அந்த வரிசையில் இடம் பெறவே விரும்புகிறேன் என்கிறார் கார்த்திகா.

Comments

Most Recent