புத்தாண்டையொட்டி நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடுநாகூர்: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், நாகை மாவட்டம் நாகூரில் உள்ள ஹசரத் சையத் ஷாஹுல் ஹமீத் குவாதிர் வாலி தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

டிசம்பர் 31ம் தேதி இரவு தர்காவுக்குச் சென்றார் ரஹ்மான். அவரைப் பார்த்ததும் அங்கு பெரும் திரளானோர் கூடி வரவேற்றனர். பின்னர் தர்காவுக்குள் சென்ற ரஹ்மான் அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

ரஹ்மானின் வருகை குறித்து தர்காவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இந்த தர்காவின் தீவிர பக்தர் ரஹ்மான். வருடாவருடம் இங்கு நடைபெறும் விழாக்களுக்கு அவர் தவறாமல் வருவார்.

மேலும், முக்கியப் பணி ஒன்றை மேற்கொள்ளும் சமயங்களில் எல்லாம் இங்கு வந்து சிறப்புப் பிரார்த்தனை செய்து விட்டுத்தான் அதைத் தொடங்குவது ரஹ்மானின் வழக்கம் என்றார்.

கிட்டத்தட்ட 500 ஆண்டு பழமை வாய்ந்தது நாகூர் தர்கா. நபிகள் நாயகத்தின் 23வது வழித்தோன்றல்தான், துறவி ஹசரத் சையத் ஷாஹுல் ஹமீது என்று நம்பப்படுகிறது.

Comments

Most Recent