Entertainment
›
Cine News
›
இயக்குநர் அமீருக்கு தடை என நினைத்து விட வேண்டாம். இது வேறு சமாச்சாரம்...
கேள்விக்குறி படத்தை இயக்கி நடித்த முகமது ஏ.கே. ஜெய்லானி, தற்போது 'அமீர்' என்கிற படத்தை இயக்கி, நடிக்கிறார். இந்தத் தலைப்பை வைக்க பி...
கேள்விக்குறி படத்தை இயக்கி நடித்த முகமது ஏ.கே. ஜெய்லானி, தற்போது 'அமீர்' என்கிற படத்தை இயக்கி, நடிக்கிறார்.
இந்தத் தலைப்பை வைக்க பிலிம் சேம்பர் சென்ற போது, இங்கு எற்கனவே இந்த பெயரில் ஒரு பிரபல இயக்குநர் இருப்பதால், இந்த தலைப்பு வைக்க அனுமதி இல்லை என்று மறுத்து, தடை விதித்து விட்டார்களாம்.
இருப்பினும், இயக்குநர் அமீரிடம் சென்று அதற்கு நோ அப்ஜக்ஷன் கடிதம் பெற்று வந்த பிறகு, சேம்பரில் அந்த தலைப்பு ஏற்கப்பட்டுள்ளது.
ரங்கீலா எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெய்லானி ஜோடியாக, பஞ்சாப் அழகி ஜஸ்லீன் நடிக்கிறார்.
நாட்டில் நடந்த மத மோதல் மற்றும் கலவரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, முத்துப்பேட்டையில் தொடங்கி தொடர்ந்து, ஏர்வாடி, கொச்சின், ஹைதராபாத், மும்பை, டெல்லி, காஷ்மீர், ஸ்ரீநகர், துபாய் போன்ற இடங்களில் நடக்கிறது.
Comments
Post a Comment