ரஜினி பேச்சு... வம்பு செய்யும் தியேட்டர்காரர்கள்!ரஜினி எப்போது வாயைத் திறப்பார்... பிரச்சனையை ஆரம்பிக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருப்பார்கள் போல...

இதோ ஜக்குபாய் விவகாரத்தில் அவர் பொதுவாகப் பேசியதை வைத்து பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள்.

அண்மையில் நடைப்பெற்ற ஜக்குபாய் திருட்டு டிவிடி கண்டன கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் , 'திருட்டு வி.சி.டிக்கான பிரிண்ட் லேப்களிலிருந்து போனால் அந்த லேபை கட் பண்ணுங்க, திரையரங்குகளிலிருந்துதான் போகிறது என்று தெரிந்தால், அந்த தியேட்டருக்கு படமே கொடுக்க வேண்டாம். எபெக்ட்ஸ் நிறுவனம் என்று தெரிந்தால் அதை நிறுத்துங்க, விநியோகஸ்தர்கள் பக்கம் தப்பு என்றால், அவரை தடை பண்ணுங்க' என்றார் பொதுவாக.

இது ஒரு சில தியேட்டர்காரர்களுக்கு குறுகுறுக்க ஆரம்பித்துவிட்டது. பெருமாபாலான படங்கள் முதலில் திருட்டு விசிடியாக வருவதே தியேட்டர் பிரிண்ட் எனும் பெயரில்தான். பல முறை திருட்டு விசிடி விவகாரத்தில் தியேட்டர் ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந் நிலையில் நேற்று முன்தினம் அவசரமாக கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ரஜினியை கண்டித்து அறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் "விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் திருட்டு வி.சி.டி காரர்களுக்கு துணை போவது போல பேசியிருக்கிறார் ரஜினி. எனவே அவர் இதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெறிவித்துள்ளனர்.

சரத் குமாரும் பிற திரைப்பட அமைப்பு நிர்வாகிகளும் எங்கே போனார்கள் இப்போது?.

Comments

Most Recent