செக்ஸ் பாம் (முன்னாள்?!) ஷகிலாவை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் 'தொழிலதிபர்' காதலன் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் சதீஷ்...
செக்ஸ் பாம் (முன்னாள்?!) ஷகிலாவை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் 'தொழிலதிபர்' காதலன் யார் என்பது தெரிய வந்துள்ளது.
அவரது பெயர் சதீஷ். ஆவடியைச் சேர்ந்தவர். விஜயகாந்த் தே.மு.தி.க.வை ஆரம்பித்தபோது அக்கட்சியில் உறுப்பினரானவர் இவர். வில்லிவாக்கம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார்.
ஷகிலா-சதீஷ் திருமணத்தை இரு வீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. ஜூன் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருமணத்துக்குப் பின் நடிப்பதா அல்லது முழுக்குப் போடுவதா என தனது வருங்காலக் கணவர் மற்றும் அவரது வீட்டாருடன் கலந்து பேசி வருகிறாராம் ஷகிலா.
இதுகுறித்து குமார் கூறும்போது,'நான் தீவிர விஜயகாந்த் ரசிகன். தொடக்கத்தில் அவரது ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தேன். தே.மு.தி.க. ஆரம்பித்ததும் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளரானேன். எங்கள் திருமணம் கேப்டன் தலைமையில் நடைபெறும். அவர் தேதிக்காக காத்திருக்கிறோம்' என்றார்.
Comments
Post a Comment