ஆயிரத்தி ஒண்ணாவது தடை உடைத்து, பொங்கலுக்கு வருவானா ஆயிரத்தில் ஒருவன்?

பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த ஆயிரத்தில் ஒருவன் படம்,  படப்பிடிப்புத் தொடங்கிய காலத்திலிருந்தே ஆயிரம் பிரச்சனை. தடைகள் பல தாண்டி, பொங்கலுக்கு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில்   அப் படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார் ஒரு தயாரிப்பாளர். இதற்கான வழக்கு மனுவை  சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில்அத் தயாரிப்பாளர் தாக்கல் செய்துள்ளதாக அறிய வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன் இயக்குனர் செல்வராகவன் தனகுப் படம் செய்து தருவதாகக் கூறி முற்பணம் வாங்கிக் கொண்டு, படம் பண்ணித்தராமல்  டிரீம்வேலி கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.ரவீந்திரனுடன்   இணைந்து கொண்டு  ஆயிரத்தில் ஒருவன் என்ற சினிமாவை தயாரித்துள்ளார்.  இது தெரிய வந்தபோது எனது முற்பணத்தைக் கொடுக்கும்படி படத்தயாரிப்பாளர் சங்கம் மூலம் கேட்டேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் கொடுத்த முற்பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தந்தார்கள்.  மிகுதியை ஆயிரத்தில் ஒருவன் வெளியீட்டின் முன் தருவதாக் கூறியிருந்தார்கள். ஆனால் கூறியபடி தரில்லை. ஆகவே ஆயிரத்தில் ஒருவனை வெளியீட்டினைத் தடைசெய்ய வேண்டும். எனது பாக்கிப் பணத்தைத் தந்த பின்னர் அவர்கள் படத்தை திரையிடட்டும் எனக் கோரியுள்ளார் அந்தத் தயாரிப்பாளர்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதி  ஆயிரத்தில் ஒருவன் படத்தை 20-ந் தேதி வரை திரையிட இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  வரும் 14ந் திகதி திரைக்கு வரும் என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதான தடையுத்தரவு,  தயாரிப்பாளருக்கு பெரும் தலையிடியைத் தோற்றுவித்துள்ளது.
இந்தளவில் ஆயிரம் தடைகள் தாண்டி வந்த, ஆயிரத்தில் ஒருவன்  ஆயிரத்தி ஒன்னாவது தடை தாண்டி, பொங்கலுக்கு வருவானா..?

Comments

Most Recent