குர்பானியை ரீமேக் செய்ய விரும்புகிறேன் - பர்தீன் கான்1980ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன குர்பானி படத்தை ரீமேக் செய்யும் ஆசை மனதில் உள்ளது. சமயம் வர வேண்டும் என்று குர்பானி பட நாயகன் பெரோஸ் கானின் மகனும், நடிகருகமான பர்தீன் கான் கூறியுள்ளார்.

பெரோஸ் கான் உயிருடன் இருந்தபோதே, இந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும், அதில் பர்தீன் கான் நடிக்க வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அது கடைசி வரை நிறைவேறவில்லை.

இதுகுறித்து பர்தீன் கான் கூறுகையில், எனது தந்தையின் கடைசி ஆசை குர்பானியை ரீமேக் செய்ய வேண்டும் என்பதே. ஆனால் அது நிறைவேறவில்லை. ஆனால் தற்போது குர்பானியை ரீமேக் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் வலுவாக வேரூண்றி விட்டது.

மிக் சிறந்த முறையில் இந்தப் படத்தைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தித் திரையுலக வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் வரவில்லை என்ற ரீதியில் அது இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார் பர்தீன்.

பெரோஸ்கான் தயாரித்து இயக்கிய படம்தான் குர்பானி. வினோத் கண்ணா, ஜீனத் அமன், பெரோஸ்கான் உள்ளிட்டோர் நடித்த படம். மிகப் பெரிய வெற்றியை இந்தியில் பெற்றது.

இப்படத்தின் பாடல்கள் மெகா ஹிட் ஆனவை. அதிக அளவில் இப்படத்தின் பாடல் கேசட்டுகளும், ரெக்கார்டுகளும் விற்று சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent