சிரஞ்சீவி மகளுடன் வீட்டை விட்டு ஓடிய மாப்பிள்ளைக்கு உயர் பதவி!தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவியின் மகளுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைக்கு திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் பெயர் ஸ்ரீரிஷ் பரத்வாஜ். சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவை கடந்த2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டவர் இவர்.

ஸ்ரீஜாவும் இவரும் 4 வருடமாக காதலித்து வந்தனர். ஆனால் இதற்கு சிரஞ்சீவியின் குடும்பம் பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், பரத்வாஜை சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று கோபத்துடன் மிரட்டினார்.

திடீரென்று ஒருநாள் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தை சிரஞ்சீவி ஏற்கவில்லை. இதனால் அவர் மூலம் தனது கணவருக்கு ஆபத்து வரலாம் என்றும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோர்ட்டுக்கு போனார். போலீசாரும் பாதுகாப்பு அளித்தனர்.

தற்போது ஸ்ரீஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தினரும் பகையை மறந்து பாசத்தில் நெருங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீரிஷ் பரத்வாஜுக்கு திரைப்பட தணிக்கை குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Comments

Most Recent