மக்கள் தொலைக்காட்சியில் 'ஆலயம்'!தமிழர் திருநாள் முதல் மக்கள் தொலைக்காட்சியில் 'ஆலயம்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் 'ஆலயம்' நிகழ்ச்சி மாலை 6.05 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

"சமயம் என்பது வெறும் சடங்குகளின் தொகுதியல்ல. ஆன்மிகம் என்பது ஆர்ப்பாட்டத்தின் வடிவமல்ல. கோயில்கள் தமிழகத்தின் அடையாளங்கள், வரலாற்று ஆவணங்கள். தமிழகத்தில் எண்ணிறந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை..."

-இப்படி ஆலயத்தின் தல வரலாறு, தனிச்சிறப்பு, இவற்றோடு, ஒவ்வொரு பெயரில் ஆலயத்திற்குள் விளங்கும் அறிவியலை, எளிமையாக விளக்குகிறார்களாம் இந்தத் தொடரில்.

ஜனவரி 14ம் தேதி, தமிழர் திருநாளன்று, ஒலிபரப்பாகும் இந்தத் தொடரின் முதல் நிகழ்ச்சியில் 'அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில்' இடம் பெறுகிறது.

Comments

Most Recent