தமிழைக் கொல்லாதவர்களுக்கு மட்டுமே பாட வாய்ப்பு-பரத்வாஜ்

தமிழ் தெரிந்த, தமிழை நன்கு உச்சரிக்க தெரிந்த பாடகர்களுக்கு மட்டுமே நான் பாட வாய்ப்பு தருவேன். அசல் படத்திலும் அப்படித்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என பிரபல திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் ரமணசமுததிரம் வந்திருந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், பிப்ரவரி 6ம் தேதி வெளிவர இருக்கும் அஜித்தின் அசல் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளி வருகிறது. இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்.

இந்த படத்தில் தமிழ் தெரிந்த, தமிழை நன்கு உச்சரிக்க கூடிய பாடகர்களை கொண்டே பாடல்கள் பாடப்பட்டுள்ளது. மிகப்பெரிய பிரபலங்கள் இல்லாத வகையில் இப்படத்தில் பாடுவதற்கு புதிய முகங்களுக்கு முழு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனனி, சுனிதா, சுர்முகி, குமரன், ஸ்ரீகரன், முக்கேஷ் ஆகியோருக்கு இப்படத்தில் பாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்குறிச்சியில் நடக்கும் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் தெப்ப நிகழ்ச்சியில் இசையமைத்து பாடுகிறேன்.

என்னுடன் சேர்ந்த பிரபலங்கள் நீங்கள் ஏன் சிறிய, சிறிய விழாக்களுக்கு எல்லாம் சென்று கலந்து கொள்கிறீர்கள் என கேட்கிறார்கள். நான் பிறந்த கிராமம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்களை எல்லாம் சாதாரண முறையில் வந்து அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதால் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியும், புதுத் தெம்பும், பெரும் உற்காசமும் கிடைக்கிறது என்றார் பரத்வாஜ்.

Comments

Most Recent