Aavi Amutha sues defamation on Kanaga for Rs 50 lakhs

 http://thatstamil.oneindia.in/img/2010/02/10-kanagaa200.jpg
தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டியளித்த கனகா ரூ.50 லட்சம நஷ்டஈடு தரவேண்டும் என ஆவி அமுதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக இருந்த முத்துக்குமார் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணம் ஆன 15வது நாள் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கடந்த வாரம் பேட்டியளித்தார்.

ஆனால் அவர் காணாமல் போய் 3 ஆண்டுகள் ஆவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் வந்ததால் இவ்வளவு தாமதமாக புகார் தருவதாகவும் கனகா கூறினார்.

இந்த முத்துக்குமாரை தனக்கு அறிமிகம் செய்து வைத்ததுடன், திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்தவரே ஆவி அமுதாதான் என்றும் கனகா கூறினார்.

இந்நிலையில் ஆவி அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக நடிகை கனகா ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அமுதா கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், ஆவி அமுதா தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக வரும் 17ம் தேதிக்குள் கனகா பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Comments

Most Recent