Andrea Ready to do more glamour

ஆண்ட்ரியா..மகா தாராளம்

http://thatstamil.oneindia.in/img/2010/02/20-andrea200.jpg

ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு மட்டும் என் திறமையைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டாம். நல்ல வாய்ப்புகள் வந்தால் கவர்ச்சியிலும் நடிப்பிலும் பெரும் சவாலாகத் திகழ்வேன் என்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

ஆயிரத்தில் ஒருவன் படம் தனக்கு புதிய வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் என்று நம்பியவர்களில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அதனால் புதுப்பட வாய்ப்புகளும் வரவில்லை அவருக்கு.

உடனடியாக தனக்கு வேண்டிய சில நிருபர்களை அழைத்த ஆண்ட்ரியா,

"நல்ல வாய்ப்புகள் வந்தால் கதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "சமீபத்தில் ஒரு புதுப்படம் ஒன்றில் லிப் கிஸ் அடிக்கச் சொல்லி கேட்டார்கள். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் டபுள் ‌ஓ.கே., சொல்லி திருப்தியாக நடித்துக் கொடுத்தேன். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?.

பிறந்ததில் இருந்தே கிஸ் அடிக்கிறோம். ஆனால் படத்தில் கிஸ் அடிச்சா மட்டும் தப்புங்கிறோம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக லிப் கிஸ் அடிப்பேன். நீச்சல் உடையில் நடிப்பேன்.

படுக்கை அறைக் காட்சியும் ஓகேதான். என்னிடம் அதுபற்றி கேட்கவும் தயக்கம் வேண்டாம். காட்சிகள் சிறப்பாக வருவதற்குத்தானே இதெல்லாம் செய்கிறோம்" என்றார் மகா தாராளத்துடன்.

Comments

Most Recent