மறக்க முடியாத மனிதர் மரணம்!

கடைசியாக பரத், ஆர்யா நடித்த பட்டியல் படத்தில் வி.எம்.சி ஹனிபா தமிழ்ரசிகர்களை அட போட வைத்திருந்தார். அதற்கு முன்பு மகாநதியில் காமிக் துணை வில்லனாக வாழ்ந்து தமிழ்ரசிகர்களின் இதயங்களில் நீங்க இடத்தைப் பிடித்துக்கொண்டவர். தாய் மொழியான மலையாளத்தையும், தமிழையும் கலந்து ,குழைந்து ஹனிபா பேசும் பாணி தமிழ்ரசிகர்களின் காதுகளில் இந்த செய்தியைக் கேட்டால் நிச்சயம் எதிரொலிக்கும்.
அடுத்த நொடியே அணிச்சயாய் கண்கள் கலங்கும். ஆம்! கொச்சின்  ஹனிபா என்று அழைக்கப்படும் விஎம்சி ஹனிபா இன்று மாலை சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவ மணையில் திவிர இதய அடைப்பு காரணமாக காலமாகிவிட்டார். மலையாளப் பட உலகில் எதிர்மறைப் பாத்திரங்களை ஏற்று எழுபதுகளில் தனது திரைப்பட வாழ்வைத்தொடங்கிய ஹனிபா இதுவரை 250க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். தனக்கு வேலையில்லாத பாத்திரங்களை ஏற்க மறுத்தவர் மட்டுமல்ல, ஒரு தரமான இயக்குனராகவும் தன்னை தென்னிந்தப்பட உலகில் பதிவு செய்திருகிறார். தமிழில் ‘பாடாத தேனிக்கள்’ படத்தை இயக்கியதன் மூலம் இங்கே கால் பதித்த ஹனிபா, பாசப்பறவைகள், பகலில் பௌர்னமி, உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழ் ரசிகர்களின் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை 4தமிழ்மீடியா ஆவருக்கு சமர்பனம் செய்கிறது.
source : மறக்க முடியாத மனிதர் மரணம்!

Comments

Most Recent