நடிகர் சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்


சென்னை, ​​ பிப்.​ 9:​ தன்னைப் பற்றி அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ள நடிகர் சிங்கமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி நகைச்சுவை நடிகர் வடிவேலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.நிலம் வாங்கித் தருவதில் ரூ.7 கோடி முறைகேடு செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு போலீஸில் புகார் செய்தார்.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில்,​​ வடிவேலுவின் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் சிங்கமுத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம்:நடிகர் சிவாஜி கணேசன்,​​ இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் ஆகியோரின் மரணத்தின் போது வடிவேலு நடித்தார் என்று நீங்கள் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.அவரது நண்பன் முருகேசன்,​​ வீட்டு வேலைக்காரப் பெண் உள்ளிட்டோர் மரணத்துக்கும் வடிவேலுவே காரணம் என்றும் நீங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.இது முற்றிலும் பொய்யானது.​ இந்தச் ​ செய்தியால் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.​ இதுதொடர்பாக 7 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.இல்லையென்றால் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கமுத்து நோட்டீஸ்:​ இதேபோல்,​​ வடிவேலு அவதூறாகப் பேசியதாகக் கூறி அவருக்கு நடிகர் சிங்கமுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Comments

Most Recent