ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாராசென்னை விமான நிலையத்தில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
மனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்!).
இந் நிலையில் நயன்தாரா, ஒரு கன்னட படத்தில் நடிப்பதற்கு சம்மதித்து இருக்கிறார். இதற்கான போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்கு நயன்தாரா, பிரபுதேவாவையும் உடன் அழைத்து சென்றார். கன்னட படத்துக்காக போட்டோ செஷன் முடிந்து, இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.
ஓட்டம்…
விமானத்தில் இருந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் கைகோர்த்தபடி இறங்கி வந்தார்கள்.
விமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் கேரளாவில் இருந்து வரும் நடிகர் ஜெயராம் பேட்டிக்காகக் காத்திருந்தார்கள். இதை கவனித்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, பிரபுதேவா காதில் போய் கிசுகிசுத்தார்.
அவ்வளவுதான். பிரபுதேவாவின் முகம் வியர்த்துவிட்டது. நயன்தாராவின் கையை உதறினார். எங்கே ஓடி ஒளியலாம்? என்று அந்த பாதுகாப்பு அதிகாரியிடமே கேட்டார். அவர் கொடுத்த ஐடியாவின்படி, நயன்தாராவை அழைத்துக்கொண்டு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு ஓடினார்கள்.
அங்கிருந்து, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் இருவரும் தப்பி ஓடினார்கள். அப்படி ஓடியதையும் விடவில்லை பத்திரிகை புகைப்படக்காரர்கள் என்பது பிரபு தேவா-நயன்தாராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை!

Comments

Most Recent