Last Updated : ...
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழகத்தின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் "பட்டா பட்டி' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். கதாநாயகி ஹரிணி உள்பட ஏராளமான புதுமுகங்கள் முக் கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சான்ரா மீடியா மற்றும் ஃப்ளிக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன."ஜெயம்' ராஜா, சிம்புதேவன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய யுவராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...""இந்திய அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு வரும்போது நிகழும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதுதான் கதை. அதனாலேயே சடகோபன் ரமேஷை கதாநாயகன் ஆக்கியுள்ளோம். இது அவருக்காகவே உருவான கதை. சிறு வயது நினைவுகளைப் பிரதிபலிக்கும் கதை என்பதால் "பட்டா பட்டி' (ஆண்கள் அணியும் முழுக்காற்சட்டை) என்ற தலைப்பை வைத்துள்ளோம். முழு படப்பிடிப்பும் தேனியில் உள்ள உப்பார்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. படத்தில் பெரிய மெúஸஜ் எல்லாம் கிடையாது. ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை ஒரே கலாட்டாவான படம்'' என்றார் இயக்குநர் யுவராஜ்.
Comments
Post a Comment