இயக்குனர்களின் நடிகன்னு சொல்லிட்டா மட்டும் காணுமா..? - கடுப்பான தனுஷ்

தெலுங்கில்  வெற்றிபெற்ற ரெடி படத்தை தமிழில் ‌ரீமேக் செய்கிறார்கள். யாரடி நீ மோகினி, குட்டி படங்களை ‌ரீமேக் செய்த மித்ரன் ஜவஹர் ரெடி ‌ரீமேக்கையும் இயக்குகிறார். தனுஷ் - இயக்குனர் வெற்றிமாறன்,  தனுஷ்- பூபதி பாண்டியன், தனுஷ் சுப்ரமணியம்-சிவா எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் மித்ரனும்,  தனுஷும். இப்போது இந்த வரிசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள்.
ரெடி படத்தில் ஒரு பாடலை எழுத வைத்து தனுஷை பாடலாசிரியர் ஆக்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி. தனுஷ் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் வாங்குகிற அளவுக்கு நடிப்பில் படத்துக்குப் படம் ஜொலித்துக்கொண்டிருந்தாலும். ஜொள் விடுவதில் நான் யாருக்கும் சலைத்தவன் இல்லை என்றுசொல்லாமல் சொல்லும் விதமாக நடந்துக்கொண்டாராம் ரெடி படப்பிடிப்பில். தற்போது சீடன் படத்தில் நட்புக்காக நடித்துவரும் தனுஷ்,  கடந்த மாதம் ரெடி படத்தில் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் கலந்து கொண்டாராம். அவரது உற்சாகத்துக்கு காரணம் ஜெனிலியா என்கிறார்கள் படக்குழு வட்டாரத்தில். இன்னும் தமிழ் தலைப்பு சூட்டப்படாத ரெடி பட்த்தில் தனுஷுக்கு ஜோடி ஜெனிலியா. தெலுங்கிலும் இவர்தான் ஹீரோயினாக நடித்திருந்தார். ஒரு கைக்குட்டை மாதிரி 'கச்சிதமாக' இருப்பவர் ஜெனிலியா. ஆனால் இந்த கைக்குட்டைக்கு ஆசைப்பட்டு வேறொரு கைக்குட்டையால் மூக்கு சிந்த வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் தனுஷ்.

"நம்ம படத்துக்கு யாருங்க ஹீரோயின்?" இப்போதெல்லாம் தன்னுடன் டூயட் பாடப் போகும் அழகிகளை டிசைட் செய்வது ஹீரோக்கள்தானே?  இந்த எண்ணத்தில் தனுஷிடம் டைரக்டர் மித்ரன் கேட்டபோதுஇ அவர் கைகாட்டிய அழகிதான் ஜெனிலியா. தனுஷ் ஆசைப்பட்ட  மாதிரியே ஜெனிலியாவை அழைத்து  வந்துவிட்டார்கள். அவருக்கான  சம்பளம் 55 லட்சம். வந்த இடத்தில் அப்படி இப்படி இருந்தால்தானே இன்ட்ரஸ்ட்? ஆனால் ஜெனிலியாவோ செல்போனும் காதுமாக செட்டில் ஆகிவிட, ஒட்டுக் கேட்கிற வழக்கம் ஒருவருக்கும் இல்லையென்றாலும், எதிர்முனை கிளுகிளு பார்ட்டி யார் என்பதை இரண்டே நாட்களில் மோப்பம் பிடித்துவிட்டாராம் தனுஷ்.
அவர்? பிரபல பாலிவுட் ஹீரோ ரித்தீஷ் தேஷ்முக்! ஜெனிலியாவுக்கும் இவருக்கும் காதல் என்பதும்.  இருவர் காதலுக்கும் வீட்டில் பலத்த எதிர்ப்பு என்பதும் ஜெனிலியா சொல்லிதான் தனுஷூக்கே தெரியுமாம். வெறுத்துப்போன தனுஷ் 25 நாட்கள் போடப்பட்ட படப்பிடிப்பு ஷெட்யூலை 18 நாட்களிலேயே பேக் அப் செய்திருக்கிறார்கள். பாவம் தனுஷ்! சீடனிலும் தனுஷுக்கு ஜோடி இல்லை. இயக்குனர்களின் நடிகருக்கு இருக்கிற டென்ஷன யாராவது புரிஞ்சுகிறீங்களாப்பா?!

Comments

Most Recent