சீரியஸ் சினேகா!


தெலுங்கிலும் தமிழிலும் சூப்பர் ஹிட் ஆன "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படம், "பவானி ஐ.பி.எஸ்.' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜயசாந்தி நடித்த வேடத்தில் சினேகா நடித்துள்ளார். பொன்னம்பலம், கோட்டா சீனிவாசராவ், சம்பத், ஆர்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருப்பவர் கிச்சா.படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த அனுபவம் குறித்து சினேகாவிடம் கேட்டபோது...""கடந்த 9 ஆண்டுகளில் 50}க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் இதுபோன்ற சவாலான ஒரு வேடத்தில் இதுவரை நடித்ததில்லை. இந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேனா என முதலில் தயங்கினேன். பிறகு, இயக்குநர் அளித்த நம்பிக்கையில்தான் படத்தில் நடித்தேன்.இதில் வழக்கமான சிரிப்பழகி சினேகாவைப் பார்க்க முடியாது; சீரியஸôன போலீஸ் அதிகாரி பவானியைத்தான் பார்க்க முடியும். இதில் நடை, உடை, பாவனை என அனைத்து விஷயங்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளேன். அதற்கு சண்டைப் பயிற்சியாளர் தளபதி தினேஷ்தான் காரணம்.இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய சினிமா கேரியரில் பெரிய மாற்றம் ஏற்படும். போலீஸ் வேடத்துக்காக  திலகவதி ஐ.பி.எஸ்.ஸிடம் பேசி, சில "டிப்ஸ்' பெற்றுக்கொண்டேன். "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படத்தில் நடித்த விஜயசாந்தியைப் போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என கேட்கிறார்கள்... இப்போது என் நோக்கமெல்லாம் சினிமா மீது மட்டும்தான். அரசியலுக்கு வருவது பற்றி 10 வருடங்களுக்குப் பிறகு முடிவு செய்வேன்'' என்றார்.

Comments

Most Recent