முதல்வர் பாராட்டு விழா – சில சுவாரஸியங்கள்

நாளை முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்‌த் திரையுலகம் பாராட்டு விழா நடத்துகிறது. பலமுறை தமிழ்‌த் திரையுலகம் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியிருந்தாலும் இந்த விழாவின் ஹைலைட் சமாச்சாரங்களும், சர்ச்சைகளும் முன்பிருந்ததில்லை. தனித்தனியாக அவற்றை எழுதுவதை தவிர்க்கவே இந்த சுவாரஸிய தொகுப்பு.

முதல்வருக்கு நடக்கும் இந்தப் பாராட்டு விழாவுக்கென்றே ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். முதல்வரைப் பாராட்டுவதில் வைரமுத்து, அப்துல் ரகுமான் போன்றவர்களை பல தசா‌ப்தத்துக்கு முன்பே தோற்கடித்தவர் வாலி என்பதை நினைவில் கொள்க. நீ என் தாயாகிறாய், நான் வாலாட்டும் நாயாகிறேன் என்று முதல்வரை தனது பிளாட்டி‌வ‌ரிகளால் புகழ்ந்தவர் காவிய கவிஞர்.

தற்போது ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜின் இசையில் முதல்வரை பச்சைத் தமிழா, இச்சைத் தமிழா என்று எதுகை மோனையில் விளாசியிருக்கிறார். இந்த முதல்வர் பரணியை பாடகர்களுடன் ர‌ஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களும் மேடையில் பாடயிருக்கிறார்கள். மன்னன் படத்துக்குப் பிறகு ர‌ஜினி பாடும் பாடல் இதுவாகவே இருக்கும்.

முதல்வ‌ரின் பவள வ‌ரிகளுக்கு ரஹ்மான் இசையமைத்த பாடலொன்றும் இந்தப் பாராட்டு விழாவில் இடம்பெறுகிறது. முதிய சூப்பர் ஸ்டார்கள் பாடுவதால் இந்தப் பாடலுக்கு இளைய சூப்பர் ஸ்டார்கள் அ‌ஜித், விஜய், விக்ரம் இணைந்து ஆடுகிறார்கள்.

பிரபுதேவா ஒரு பாடலுக்கு தனது துணைவி ாரி, துணையுடன் ஆடுகிறார். பிரபுதேவாவுடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் அந்தத் துணை, நயன்தாரா.

்‌ிஷா, பாவனா, ஸ்ரேயா, ப்‌ரியாமணி, சந்தியா ஆகியோர் மேடையில் குத்தாட்டம் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இதனை கண்டித்திருக்கும் பெப்சி அவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என அறிவித்துள்ளது.

நடிகர் சங்க உறுப்பினராக இருக்கும் விஜயகாந்த் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று பெப்சி கேட்டு, அவர் மறுத்திருந்தால் அவருக்கும் ரெட் கார்ட் போடுவார்களா என்பது தடை போடப்பட்டிருக்கும் தரப்பினர் எழுப்பும் கேள்வி. மேலும், தமிழின் முன்னணி நடிகரான விஜயகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ளவேப் போவதில்லை. அவருக்கு பெப்சி என்ன தண்டனை தரப்போகிறது?

கேள்விகள் ஆயிரத்துடன் பராட்டு கும்பமேளா நாளை நடக்கிறது. ம்... தமிழ்நாட்டு ஜனங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

Comments

Most Recent