ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களில் அன்னையருக்கு வணக்கம் செலுத்தும் விழா சென்னையில் இன்று (11ம்தேதி) மாலை...
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களில் அன்னையருக்கு வணக்கம் செலுத்தும் விழா சென்னையில் இன்று (11ம்தேதி) மாலை நடக்கிறது. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தங்களது அன்பு குழந்தைகளை சர்வதேச புகழ்மிக்க திறமையாளர்களாய் வளர்த்தெடுத்த அன்னையருக்கு வணக்கம் செலுத்தும் விழா நடத்தப்படுகிறது. காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் அன்னை கரீமா பேகம், டைரக்டர் எஸ்.ஷங்கரின் அன்னை முத்துலட்சுமி, கமலா தியேட்டர் நாகு சிதம்பரத்தின் அன்னை கமலா சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களின் அன்னையருக்கு மகுடம் சூட்டி மரியாதை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி செய்துள்ளார்
Comments
Post a Comment