Cine industry thanks Mamtha


சென்னை, பிப். 26: ரயில்வே பட்ஜெட்டில் சினிமா படப்பிடிப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளால் இந்தியத் திரையுலகினர் பயனடைவார்கள் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு திரைப்படத் துறையினருக்கு அளித்து வரும் பல சலுகைகளால் திரைப்படங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில் சினிமா படப்பிடிப்புகளுக்காக செல்லும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 2}ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 75 சதவீதமும், அனைத்து உயர் வகுப்பு பெட்டிகளிலும் 50 சதவீதமும் கட்டண சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகைகளால் ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும் பயனடையும்.திரைத் துறையினருக்கு சலுகைகளை அறிவித்துள்ள ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

Most Recent