Cinema is my only lover, no girls - Shimbu

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw454.jpg

சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை என்றார் சிம்பு. இது பற்றி அவர் கூறியதாவது: ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, நாளை ரிலீசாகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். கவுதம் மேனன், ரகுமானுடன் நானும் இணைந்த படம் என்பதால் இதை எதிர்பார்த்திருக்கிறேன். படத்தில் எனக்கு ஜோடி த்ரிஷா. அவர் எனது தோழி. அவருடன் காதல் என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். அதில் உண்மை கிடையாது. இப்போதைக்கு எந்த பெண்ணையும் நான் காதலிக்கவில்லை. சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். எனக்கு மனைவியாக வரப்போகிறவர், சாதாரணமானவராய் இருந்தால் போதும். மற்றபடி எதையும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த படம் பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை. இப்போதைக்கு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ரிசல்டுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு சிம்பு கூறினார்.

Comments

Most Recent