Danush in his wife's direction

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRZz4sKQaqSIiVlaEfJU-4ogMA7zCqzd3RGU0gF0iDj2SCbpPNrHLxSagRytmnrBFd4SIR0M8na8aYJTOyEQjjmWjPHo7Kaue-av8-tEbNrG5GY-_6VrnmRqgOVaysQimOmYmpUqf45VE/s400/Aishwarya_20080816-1_1219068608_large.jpg

நடிப்பு, இயக்கம் இரண்டில் எது ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டால் தயங்காமல் தனுஷிடமிருந்து வருகிற பதில், “இயக்கம்தான் பிடிக்கும்.”

படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் விருப்பம். தன்னை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.

“அண்ணனின் ஆயிரத்தில் ஒருவனில் உதவி இயக்குனர் போல வேலை செய்திருக்கிறேன். அந்தப் படத்தின் கதை உருவானதிலிருந்து ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து வந்திருக்கிறேன். இயக்குனருக்கான அடிப்படை விஷயங்கள் கற்றுக் கொண்டபின் படம் இயக்குவேன்” என்கிறார் உறுதியுடன்.

தற்போது ரெடி படத்தின் ‌‌ரீமேக்கிலும், வெற்றிமாறனின் ஆடுகளத்திலும், சுரா‌ஜின் மாப்பிள்ளையிலும் நடித்து வருகிறார் தனுஷ். விரைவில் அவரை வைத்து படம் இயக்கப் போகும் அறிமுக இயக்குனர் ஜஸ்வர்யா தனுஷ். ஆம், தனுஷுக்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

Comments

Most Recent