தமிழில், விட்ட இடத்தை பிடிப்பேன் என்றார் சவுந்தர்யா என பெயர் மாறியுள்ள ஹனிரோஸ். தற்போது,‘காந்தர்வன்’ படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவ...
தமிழில், விட்ட இடத்தை பிடிப்பேன் என்றார் சவுந்தர்யா என பெயர் மாறியுள்ள ஹனிரோஸ். தற்போது,‘காந்தர்வன்’ படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது: தமிழில் சில படங்களில் நடித்த நிலையில் மலையாளத்துக்குச் சென்று விட்டேன். அதற்குப் பிறகு தமிழில் நடிக்க நல்ல வாய்ப்பு அமையவில்லை. இப்போதுதான் ‘காந்தர்வன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறேன். ‘சிங்கம் புலி’ படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறேன். ‘காந்தர்வன்’ படத்தில் கிராமம், நகரம் என இரண்டு கெட்&அப்களில் நடிக்கிறேன். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள காதல் கதை. பாடல் காட்சிகளில் கொஞ்சம் கிளாமர் இருக்கும். இந்தப் படம் தமிழில் நான் தவறவிட்ட இடத்தை பிடிக்க உதவும். ‘சிங்கம் புலி’ அதற்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
Comments
Post a Comment