‘புலி வேஷம்’ படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்று இயக்குனர் பி.வாசு கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது: ‘ஆப்தரக்ஷகா&...
‘புலி வேஷம்’ படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்று இயக்குனர் பி.வாசு கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது:
‘ஆப்தரக்ஷகா&2’ படத்துக்கு கன்னடத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை தமிழில் இயக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ரஜினி அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இப்போது இயக்கி வரும் ‘புலிவேஷம்’ படத்தின் ஒரு ஷெட்யூல் மட்டுமே முடிந்துள்ளது. இந்தப் படத்தில் ஆர்.கே. ஹீரோ. அவருடன் நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அதற்காக நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம். இவ்வாறு வாசு கூறினார்.
Comments
Post a Comment