Junior NTR's marriage and engagement postponed

http://thatstamil.oneindia.in/img/2010/02/10-sheela-juniorntr-lakshmi-pranathi200.jpg
என்.டி.ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆருக்கும், சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகளின் மகளுக்கும் நடக்கவிருந்த திருமண நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணம் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருக்கும், சந்திரபாபு நாயுடுவின் பேத்தி முறை வரும் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் தீர்மானித்தனர்.

ஆனால், பிரணதிக்கு வயது 18 ஆகவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கும் தாக்கலானது. இதையடுத்து, 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் திருமணம் நடத்த முடிவாகியுள்ளது என்று நாயுடு கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தார்.

இந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம், திருமண வேலைகள் உள்ளிட்டவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 26ம் தேதிதான் பிரணதிக்கு 18 வயது முடிகிறது. அதற்குப் பின்னர் நிச்சயதார்த்தம் நடக்குமாம்.

மேலும், அடுத்த ஆண்டில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஜூனியர் என்டிஆரும் யோசனை தெரிவித்துள்ளாராம். எனவே அவரது விருப்பப்படியே திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.

Comments

Most Recent