தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கஜாலாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் நடிக்கக் கூடா...
தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கஜாலாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் நடிக்கக் கூடாது என்பதல்ல. எனக்கேற்ற நல்ல கதைகள் அமையவில்லை. நான்கைந்து ஹீரோயின்களுடன் ஒரு படத்தில் நடித்தேன். தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகள் வந்தபோது மறுத்துவிட்டேன். அதன் பிறகு தெலுங்கு படங்கள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். இப்போது அதிக படங்களில் நடிப்பதை குறைத்தும் கொண்டேன். நிச்சயம் நல்ல கதை, நல்ல படத்தின் மூலம் தமிழுக்கு வருவேன். தெலுங்கு ஹீரோ அல்லரி நரேஷுடன் காதல் என்பதில் சிறிதும் உண்மையில்லை. அவருடன் நான் நடித்த படம் வெளியாக இருக்கிறது. அதையொட்டி இப்படி ஒரு புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். திருமணம் பற்றி நான் இப்போது எந்த முடிவுக்கும் வரவில்லை. இவ்வாறு கஜாலா கூறினார்.
Comments
Post a Comment