Mohan Lal supports Mamooty opposing Thilagan

மம்மூட்டிக்கு ஆதரவாக திலகன் மீது மோகன் லால் பாய்ச்சல் 
http://cinema.dinakaran.com/cinema/gallery/kw415.jpg
திருவனந்தபுரம், : மலையாள நடிகர் சங்கம், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்துக்கு எதிராக திலகன் கருத்து தெரிவித்து வருகிறார்.
இதனால் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்மூட்டியே காரணம் என்றும் சமீபத்தில் துபாயிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது; அத¤லும் மம்மூட்டிக்கு தொடர்பு இருக்கிறது என்றும் திலகன் கூறி வருகிறார். இதுபற்றி மோகன்லால் கூறியதாவது: திலகன் சிறந்த நடிகர். பட்டினி கிடந்து அவர் நடித்த காலங்களும் உண்டு. அவரிடமிருந்து என்னைப் போன்ற நடிகர்கள் கற்க வேண்டியது நிறைய உள்ளது. அதே நேரம், எங்களில் ஒருவரான மம்மூட்டிக்கு எதிராக அவர் பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதை ஏற்க முடியாது. இதனால் மம்மூட்டி வேதனையில் உள்ளார். அவரது வேதனை, நடிகர்கள் அனைவருக்குமானது. மம்மூட்டியை தனிமைப் படுத்த முடியாது. திலகனின் வாய்ப்புகளை மம்மூட்டி பறிக்கவில்லை. புகார் கூறுவதாக இருந்தால் அதை நடிகர் சங்கத்தில்தான் திலகன் கூற வேண்டும். இவ்வாறு மோகன்லால் கூறினார். மன்னிப்பு கேட்க வேண்டும் என மலையாள நடிகர் சங்கம் விடுத்த கோரிக்கையை திலகன் ஏற்கவில்லை. இதையடுத்து மார்ச் 1&ம் தேதி சங்க அலுவலகத்தில¢ நேரில் ஆஜராகுமாறு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Comments

Most Recent