Pictures - Padhma Priya came in more glamour boutique for publicity

News பப்ளிசிட்டிக்காகத்தான் பொது விழாக்களுக்கு கிளாமர் உடையில் வருகிறேன் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். சினிமாக்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத நடிகை பத்மப்ரியா ‌பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளிலேயே வருவார். அந்த விழாவுக்கு வரும் ஒட்டுமொத்த ஆண்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அம்மணியின் கிளாமர் இருக்கும்.

இதுபற்றி அவரிடம் கேட்டால், கிளாமர் உடை அணிவது என்னோட பாலிசி. அதனால பொது நிகழ்ச்சிகளுக்கு அப்படி வர்றேன். தமிழ் சினிமாவுல கிளாமரா நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனா மலையாள சினிமாவில் கிளாமரா நடிச்சிருக்கேன். பெரும்பாலும் பட விழாக்களுக்கு வரும்போது கிளாமர் உடையில் வருவேன். அந்த பட பிரமோஷனுக்கு எனது கிளாமர் உடை பயன்படும் என்பதால் அப்படி கலந்து கொள்கிறேன். சில கம்பெனிகள் பப்ளிசிட்டிக்காக குறிப்பிட்ட உடையை அணிந்து வர வேண்டும் என்று கூறுவதால் மறுக்காமல் அவ்வுடைகளை அணிந்து பங்கேற்கிறேன், என்கிறார். நல்ல பாலிசி!!

Comments

Most Recent