‘பொய்’ படத்தில் அறிமுகமானவர் விமலா ராமன். பிறகு ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவ...
‘பொய்’ படத்தில் அறிமுகமானவர் விமலா ராமன். பிறகு ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
அறிமுகமான தமிழில் அதிக வாய்ப்பில்லை என்றாலும் தெலுங்கு, மலையாள உலகம் எனக்கு கைகொடுத்தது. சுஹா சன்ராய் இயக்கும் ‘டேம் 999’ என்ற ஆங்கில படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். வெளிநாட்டுக்காரரை காதலிக்கும் மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு ஹாலிவுட் ஹீரோவும், ஹீரோயினும் நடிக்கிறார்கள். மும்பை, கேரளா, ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் படம் இது. மார்ச் முதல் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுதவிர தெலுங்கில் ஜெகபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஸ்ரீகாந்துடன் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். கன்னடத்தில் ‘ஆப்தரக்ஷகா’வில் நல்ல வேடம். இந்த ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது. இவ்வாறு விமலா ராமன் கூறினார்.
Comments
Post a Comment