Pradhudeva, Nayan dance angers Ramalath - முதல்வர் முன்பு நயனதாராவுடன் பிரபு தேவா ஆட்டம்- ரமலத் கொதிப்பு

http://thatstamil.oneindia.in/img/2010/02/08-prabu-nayan200.jpg
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் என் கணவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடுவதா..என நயன்தாராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ரம்லத்.

இதுவரை ரகசியமாக இருந்த பிரபுதேவா - நயன்தாரா காதல் இப்போது தீவிரமடைந்துள்ளது. இருவரும் ஓட்டல்களில் சேர்ந்து தங்குகிறார்கள்.

நயன்தாராவை திருமணம் செய்ய பிரபுதேவா முயற்சிக்கிறார். மனைவி ரம்லத்திடம் இதற்கு அனுமதி கேட்டார். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து வருகிறார். ஆனாலும் இருவரின் ரகசிய சந்திப்புகள் தொடர்கின்றன.

பிரபுதேவா- நயன்தாரா காதல் விஷயத்தை ரம்லத்-தான் சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"நயன்தாரா என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். தன் கணவரை விட்டு விடும்படி கேட்டுக்கொள்கிறேன். அவரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன்" என்றெல்லாம் பேட்டிகள் கொடுத்து பரபரப்பேற்படுத்தினார்.

இதையடுத்து நயன்தாரா சென்னைக்கு ரகசியமாக வந்து போனார். ஹைதராபாத்தில் தங்கள் தனி பங்களாவில் மட்டும் இருவரும் சந்தித்து கொண்டனர்.

தற்போது சென்னையில் நேற்று முன்தினம் திரையுலகம் சார்பில் நடந்த விழாவில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஜோடியாக நடனம் ஆடி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இருவரும் ஆடுவது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நிகழ்ச்சியாக மேடையில் தோன்றினார்கள்.

மேற்கத்திய இசைக்கு இருவரும் கைகோர்த்தபடி ஆடியதில் கலங்கிப் போனார் ரமலத். இதனால் ஆத்திரமடைந்த அவர், பிரபு தேவாவை கடுமையாக கண்டித்துள்ளார்.

இருவருக்கும் வீட்டில் பெரும் தகராறு மூண்டுள்ளதாக பக்கத்து வீடுகளில் இருப்போரும், நெருங்கிய நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவை நேரில் பார்த்து இந்தப் பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட ரம்லத் முடிவு செய்துள்ளாராம். இதற்காக, நயன்தாரா எங்கு தங்குகிறார் என்று முகவரியை விசாரித்து வருகிறார் என்கிறார்கள்!

Comments

Most Recent