Prasanna's resposible speech in audio launch function

http://thatstamil.oneindia.in/img/2010/02/22-prasanna200.jpg 

பட விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளே வராமல் தவிர்க்கப்பார்க்கும் இன்றைய சூழலில், தனக்கு தெரிந்த பத்திரிகையாளர் கூப்பிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் பிரசன்னா. அது புதுமுகங்கள் நடித்த பாடகசாலை ஆடியோ வெளியீடு.

படத்தின் தயாரிப்பாளர் சுனில்தேவ், நட்சத்திரங்கள் சத்யா, அரவிந்த், சஞ்சய், ஸ்ருதி, ப்ரீத்தி புஸ்பன், பாடலாசிரியர் கரிசல் முத்து உள்ளிட்டவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும் பொறுப்பை விரும்பி ஏற்ற பிரசன்னா, அன்று பேசிய பேச்சு அத்தனை பக்குவப்பட்ட ஒன்றாக இருந்தது.

அவர் கூறுகையில், "நான் பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகம் ஆனபோது இப்படித்தான் உங்களைப் போன்று ஐந்தாறு பேரில் ஒருவனாக ஆடியோ விழாவில் மேடையேறினேன். உங்களை பார்க்கும்போது அந்தப் படத்தில் நாங்கள் குடும்பமாக வேலை பார்த்த ஞாபகம் வருகிறது.

சின்ன வயது முதலே சினிமா எனும் லட்சியத்தில் வந்ததால் இன்று என்னால் இத்துறையில் ஒரு இடம் பிடிக்க முடிந்திருக்கிறது. ஏதோ பெரிய இடம் என்றில்லாவிட்டாலும், நினைவிலிருக்கும் அளவு எனக்கும் கோடம்பாக்கத்தில் இடமிருப்பதே பெரிய விஷயம்லலவா... இதை இறுமாப்பாக கூறவில்லை. எந்த பின்னணியும் இல்லாமல், இத்துறையில் ஒரு இடம் பிடிப்பது என்பது கஷ்டம். என்னை மாதிரி பின்னணி இல்லாமல் இந்த சினிமாவில் இடம் பிடிக்க நீங்கள் சிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பத்திரிகையாளர்களை மதிக்கக் கத்துக்கங்க. திட்டினாலும், வாழ்த்தினாலும் அவர்களை நீங்கள் புறக்கணிக்காதீர்கள். காரணம் நம்மைப் போன்ற கலைஞர்களை இந்த ரசிகர்களுக்கும் உலகுக்கும் அறிமுகப்படுத்துவதே அவர்கள்தான். உயரத்தில் ஏற்றிவிட உதவுவதும் அவர்கள்தான்.

வெற்றி அடைந்தால் தலைகீழாக குதிப்பதும், தோல்வி கண்டால் சோர்ந்து போவதும் வேண்டாம். நாம் நம் வேலையை செய்தால் மட்டும் போதும். என்றாவது ஒருநாள் நாமும் சிகரத்தைத் தொடுவோம். அந்த நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். முக்கியமாக தோல்வியின் போது இருக்க வேண்டும். எல்லோருக்கும் கிடைக்காத சினிமா வாழ்க்கை நமக்கு வசப்பட்டிருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும்..." என்று சொன்னபோது, பத்திரிகையாளர்களும் சேர்ந்து கைதட்டியதைப் பார்க்க முடிந்தது.

இந்த விழாவில்தான் விசி குகநாதனும், கலைப்புலி சேகரனும் ரஜினி - அஜீத்துக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தனர். ஆனால் அப்போது பிரசன்னா கிளம்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent