Sun Kudumbam Viruthugal (Sun Family Awards) on Sun TV

http://cinema.dinakaran.com/cinema/gallery/ct15.jpg


சன் குடும்பம் விருதுகளுக்குரியவர்களை, பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி, சன் டிவியில் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.
2009&ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்தவர்களுக்கு விருது வழங்க, சன் டிவி முடிவு செய்துள்ளது. ‘சன் குடும்பம் விருதுகள்’ என்ற இவ்விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த தந்தை, சிறந்த சகோதரர் என்பது உட்பட 12 பிரிவுகளில் விருதுக்குரியவர்களை, பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நாளை இரவு 7.30 மணிக்கு, சிறந்த நடிகை, சிறந்த வில்லனை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு வெளியாகிறது.

நடிகை கஸ்தூரி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அவர், போட்டியில் இருக்கும் சிறந்த நடிகைகள், வில்லன்களிடம் அவர்களுக்கு பிடித்த காட்சிகள் போன்றவற்றை கேட்பார். அதிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பப்படும். அதில், சிறந்தவர்கள் யார் என்பதை, பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டும். அதற்கான விவரங்கள் சன் டிவியில் அறிவிக்கப்படும். வரும் புதன்கிழமைவரை இந்த எஸ்எம்எஸ்சை அனுப்பலாம்.

இதையடுத்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை 7.30 மணிக்கு மற்றப் பிரிவுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு வெளியாகும். இதே போல ஆறு வாரங்கள் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்ததை கொண்டு, சன் டிவியின் பிறந்த நாளான, ஏப்ரல் 14&ம் தேதி, விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த 12 பிரிவு தவிர, சிறந்த இயக்குனர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதையாசிரியர் உட்பட தொழில்நுட்ப பிரிவினர்கள், நடுவர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கும் அதே தேதியில் 14&ம் தேதி விருதுகள் வழங்கப்படும்.

Comments

Most Recent