தமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பில்ட்அப்பையே உருக்குலைய வைத்து வெற்றி கண்டிருக்கும் தயாநிதி அழகி...
தமிழ்ப்படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பில்ட்அப்பையே உருக்குலைய வைத்து வெற்றி கண்டிருக்கும் தயாநிதி அழகிரி, தனது அடுத்த படத்திற்கு குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரை தேர்தெடுத்திருந்தார். முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி தயாரிக்கும் இப்புதிய படத்திலும் மிர்ச்சி சிவாதான் ஹீரோ. படத்தின் தலைப்பை கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி, இந்த ஆங்கில டைட்டிலுக்கெல்லாம் வரிவிலக்கு கிடையாது என்று கூறிவிட்டாராம். இதனால் வரிவிலக்கு கிடைக்கிற மாதிரி நல்ல தமிழ் தலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார்களாம் மேற்படி படக்குழுவினர்.
அதேநேரம் இப்படத்தை தயாநிதி அழகிரியின் க்ளொவ்ட் நைன் நிறுவனம் தயாரிக்கவில்லை என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. தமிழ்ப்படத்தை எப்படி சி.எஸ்.அமுதன் அண்ட் கோவின் வொய் நாட் என்ற கம்பெனி தயாரித்து, பின்னர் தயாநிதிக்கு விற்றதோ, அதே பாணியில்தான், குவாட்டர் கட்டிங்கும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குபவர்கள் வருபவர்கள் புஷ்கர் – காயத்ரி தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment