Who is starring in 3 Idiots Tamil and Telugu version?

http://www.mumbaikar.com/en/media/get/20091228_aamir-khan-3-idiots-poster-1.jpg


இந்தியில் வெற்றிபெற்ற 3இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ‌ரிமேக் உ‌ரிமையை வாங்கியிருக்கிறார்கள். மிகப் பொ‌ரிய தொகைக்கு என்பது சொல்லாமலே தெ‌ரிந்திருக்கும்.

தமிழில் 3இடியட்ஸ் படத்தை ‌ரிமேக் செய்ய விஷ்ணுவர்தனை அணுகியிருக்கிறார்கள். ஆனால் யார் நடிப்பது? அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய்யை போடலாம் என்று அபிப்ராயங்கள் முன்மொழியப்படுகிறதே தவிர விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை.

இதே நிலைதான் தெலுங்கிலும். ஆனால் அங்கு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எஸ்.ஜே.சூ‌ர்யாவின் புலி படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அமீர்கான் நடித்த வேடத்தை செய்ய முன் வந்திருக்கிறார். மற்ற நடிகர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

நல்ல படத்தில் நடிக்கவும் தயங்குகிறார்கள். சொதப்பிவிடுவோம் என்ற பயமாக இருக்குமோ?

Comments

Most Recent