Ajith - Goutham 'Suspense Thirller' in Tamil and Malayalam

ஒரே நேரத்தில் பல வேலைகள் பார்ப்பவர் என்ற பெயர் கௌதமுக்கு கிடைத்திருக்கிறது. விரைவில் அஜித் படத்தை இயக்குகிறவர், புதுமுகம் வீரா, சமீராரெட்டி நடிக்கும் 90 நிமிட சஸ்பென்ஸ் த்ரில்லர் ஒன்றை சைலண்டாக இயக்கி வருகிறார்.

இதற்கு நடுவில் மலையாள படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையை அவர் தொடங்கி இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கௌதமின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை மலையாளி. மலையாளப் படம் இயக்க வேண்டும் என்பது கௌதமின் நீண்ட நாள் ஆசையாம். நடிகர் திலீப்புடன் அதற்கான பூர்வாங்க பேச்சை கௌதம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் அப்படம் தயாராகும் என்கிறார்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் கேரளா காட்சிகளுக்கு மலையாளிகள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைத்திருப்பதால் மலையாளப் படம் இயக்கும் கௌதமின் ஆசை விசிறி விடப்பட்டிருக்கிறது. மலையாளம், இந்தி என்று தமிழை மறக்காமல் இருந்தால் சரிதான்.

Comments

Most Recent