'Arukani to Alagu Rani' on Jaya TV


பெண்களுக்காகப் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி.​ 'அருக்கானி டூ அழகுராணி' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.​ ​ கல்லூரி மாணவிகள்,​​ பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோருக்கு முறையான பயிற்சிகள் அளித்து,​​ தன்னம்பிக்கையூட்டி அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.​ இதில்,​​ தாம் அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை உண்மையான அழகுராணிகளாக மாற்றுகிறார்கள்.​ ​ தங்களிடம் உள்ள திறமையை அறியாத பெண்களை வித்தியாசமான அணுகுறை மூலம் அவர்களுடைய திறமையை அறியச் செய்யும் இந்த நிகழ்ச்சியை குட்டிபத்மினியின் மகள் கீர்த்தனா தயாரிக்கிறார்.​ அகிலா பிரகாஷ் இயக்குகிறார்.​ ​ பிரபல சிகை அலங்கார நிபுணர்கள்,​​ ஆடை வடிவமைப்பாளர்கள்,​​ கல்வியாளர்கள்,​​ மனோதத்துவ நிபுணர்கள்,​​ பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 28}ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

Comments

  1. I find this programme absurd and very insensitive to women's feelings. If they want to make over a person who can already prove her potential and is self-confident, then its a cake walk. There is no real benefit of such programme. I believe this programme should be banned soon.

    ReplyDelete

Post a Comment

Most Recent