தசாவதாரம் படத்துக்கு பின்னணி இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத். அவருக்கு மீண்டுமொரு மெகா வாய்ப்பை அளித்துள்ளார் கமல். உதயநிதி ஸ்டாலினின் ரெட...
தசாவதாரம் படத்துக்கு பின்னணி இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத். அவருக்கு மீண்டுமொரு மெகா வாய்ப்பை அளித்துள்ளார் கமல்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் கமல் நடிக்கவிருப்பதும் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குவதும் தெரிந்த விஷயம்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பார் என முதலில் கூறப்பட்டது. ஸ்ருதிஹாசனின் பெயரும் கூட பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அதிர்ஷ்டம் அடித்திருப்பது தேவி ஸ்ரீபிரசாத்துக்கு.
ஆம், கமல் படத்துக்கு இவர்தான் இசையமைக்கிறார். கமல் ஜோடியாக த்ரிஷாவும், முக்கியமான வேடத்தில் மாதவனும் நடிக்கிறார்கள்.
Comments
Post a Comment