‘போன மச்சான் திரும்பிவந்தான் பூமணத்தோட என்பதைப் போல ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் காட்டுகிறேன்னு சொல்லிட்டு யூனிட்டை கூட்டிட்டு ஷூட்...
‘போன மச்சான் திரும்பிவந்தான் பூமணத்தோட என்பதைப் போல ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் காட்டுகிறேன்னு சொல்லிட்டு யூனிட்டை கூட்டிட்டு ஷூட்டிங்குக்கு போன பாலா 18 நாள்ல பேக்கப் சொல்லித் திரும்பிட்டாரு.
இது.. இதைத்தான் எதிர்பார்த்தோம். எங்களுக்குத் தெரியாதா..? இதுதானே நடக்கும் என்று கோடம்பாக்கம் முழுவதும் நக்கலும், கிண்டலுமாக எஸ்.எம்.எஸ்.கள் பரவித் தீர்த்தன.
இதில் அநியாயத்திற்கு மாட்டிக் கொண்டவர்கள் படத்தின் ஹீரோக்களான ஆர்யாவும், விஷாலும்தான்.. பேக்கப்புக்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் வழக்கமான பாலாவின் குணம்தான்.. வேறொன்றுமில்லை என்கிறது அவரது அலுவலக வட்டாரம்.
இதுவரையில் எடுத்தவரைக்கும் ரஷ் போட்டு பார்த்த பாலாவுக்கு மொத்தமும் பிடிக்காமல் போனதாம். இந்த மூட் அவுட்டில் “ஒரு ரெண்டு மாசம் என்னை விட்ருங்க.. அப்புறம் பார்த்துக்கலாம்” என்று ஒரேடியாகச் சொல்லிவிட்டு மெளனச் சாமியாராகிவிட்டார் பாலா.
ஏதாவது பேசி, சமாளித்துப் பார்க்கலாம் என்ற நினைப்பில் அவரைத் தொடர்பு கொள்ள நினைத்த படத்தின் நாயகர்களால் அவரைப் பிடிக்கவே முடியவில்லையாம்..! நல்லா இருக்கே கதை..!
Comments
Post a Comment