Getting more offer in Tamil - Reema Sen

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw588.jpg

தமிழில் வாரம் தோறும் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்றார் ரீமா சென். இது பற்றி அவர் கூறியதாவது:
பிரியதர்ஷன் இயக்கத்தில் அஜய் தேவ்கனுடன் ‘கரம் ஹவா’ இந்தி படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் ராகுல் தோலகியா இயக்கும் இந்தி படத்திலும் நடிக்கிறேன். இது காமெடி கதை கொண்ட படம். இந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். இது உண்மையில்லை. தமிழில் வாரம் தோறும் எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எனக்கு பிடித்த கதையாக, தயாரிப்பு நிறுவனமாக அது இல்லை. அதனால் படங்கள் ஏற்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். இவ்வாறு ரீமா சென் கூறினார்.

Comments

Most Recent