Goutham to direct Shimbu again

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw539.jpg

‘ஆங்கில வசனம் இல்லாமல் படம் இயக்கமாட்டேன். இதுதான் எனது பாணி‘ என்றார் கவுதம் வாசுதேவ் மேனன். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ‘விண்ணை தாண்டி வருவாயா’ படம்பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டபோது நிஜ சம்பவம் என்றேன். ஆனால் அது பொய். முழுக்க முழுக்க கற்பனை கதைதான். இப்படத்தில் நடித்த சிம்பு, த்ரிஷா இருவருமே யதார்த்தமாக நடித்தார்கள். வழக்கமாக காட்சிக்கு முன் பார்க்கப்படும் ஒத்திகை கூட செய்யாமல் ஒரே டேக்கில் அனைத்து காட்சிகளும் படமாக்கினேன்.

இப்படம் எனது சொந்த தயாரிப்பு. அதனால் கிளைமாக்சை என் இஷ்டப்படி வைத்தேன். இதில் வரும் லாபம், நஷ்டம் என்னைச் சேரும் என்பதால் இப்படிச் செய்தேன். மற்ற தயாரிப்பாளர் படத்தில் அப்படி பரிசோதனை செய்ய மாட்டேன். மீண்டும் சிம்புவுடன் இணைந்து படம் இயக்குவதுபற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒரு மாதத்தில் அதை அறிவிப்பேன். பொதுவாகவே எனது படங்களில் ஆங்கில வசனம் அதிகம் என்கிறார்கள். அது எனக்கும் தெரிகிறது. ஆனால், அதுதான் எனது பாணி. ஆங்கில வசனம் இல்லாமல் படம் இயக்க மாட்டேன். அடுத்த படத்தில் வேண்டுமானால் குறைத்துக்கொள்ள முயல்வேன். இவ்வாறு கவுதம் வாசுதேவ் மேனன் கூறினார்.

Comments

Most Recent