'I am getting married this year' - Nagma


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. பாட்ஷா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். “காதலன்”, “லவ்பேர்ட்ஸ்” உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, போஜ்புரி மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

பின்னர் திடீரென்று சினிமாவை விட்டு விலகி அரசியல், ஆன்மீகம் என்று போனார். கிறிஸ்தவ மத பிரசங்கங்களிலும் ஈடுபட்டார். நக்மா பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்தன. போஜ்புரி கதாநாயகன் ரவிகிஷனுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. பின்னர் கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் சுற்றுவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் தனது திருமணம் பற்றி வெளிப்படையாக நக்மா இப்போது அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எனது திருமணம், இந்த ஆண்டில் நடைபெறும். மாப்பிள்ளை யார் என்பதை விரைவில் அறிவிப்பேன். இந்தி டைரக்டர் தீபக், போஜ்புரி நடிகர் ரவிகிஷன், கிரிக்கெட் வீரர் கங்குலி போன்றோருடன் என்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்தன. தொழில் ரீதியாக சிலருடன் நெருக்கமாக இருப்போம். அதை வைத்து இப்படி வதந்திகள் கிளப்பப்படுகின்றன என்றார்.

Comments

Most Recent