Irumbu Kottai Murattu Singam - 3 years work

http://1.bp.blogspot.com/_yFu9N1wUjmI/Szjxk0nz6sI/AAAAAAAAD-k/8RddJQVLLHM/s400/Irumbu+Kottai+Murattu+Singam+Songs.jpg

'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்', விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை முழுமையாக திரையில் பார்த்துவிட்டு கண் கலங்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன்.

மூன்றாண்டுகளுக்கு மேல் கதை பற்றிய சிந்தனை, அதற்கான தேடல்கள், ஒவ்வொரு காட்சிகளையும் எப்படி எடுக்க வேண்டும்? எந்தெந்த கேரக்டருக்கு எப்படிப்பட்ட கெட்டப்? என்பது வரை பெரிய நோட்டு புத்தகத்தில் வரைந்து வைத்துக்கொண்டு அதன்படி படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர்.

பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா என மூன்று நாயகிகள் இருந்தாலும், வியட்நாமில் குட்டி குட்டியாய் 1,300 தீவுகள் உள்ள ஒரு லோகேஷனில் பத்மப்ரியா, லாரன்ஸ் ஆடும் பாடல் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்று அடித்துச் சொல்கிறார்.

Comments

Most Recent