‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் சமந்தா. இதே படம் தெலுங்கில் ‘யா மாயா ஜெசாவே’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் த்...
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் சமந்தா. இதே படம் தெலுங்கில் ‘யா மாயா ஜெசாவே’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் த்ரிஷா நடித்த கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: தமிழில் த்ரிஷா செய்த ஜெஸி கேரக்டரை தெலுங்கில் நான் செய்தேன். இப்படியானதொரு பெண்ணை வாழ்வில் எல்லாரும் கடந்துதான் போயிருப்பார்கள். படம் பார்த்த பலர், இது தனது வாழ்க்கை சம்பவத்தோடு ஒத்துப்போகிறது என்றார்கள்.
இதற்கு இயக்குனர் கவுதம் மேனன் தான் காரணம். என் மீது அவர் வைத்த நம்பிக்கையை, கஷ்டப்பட்டு முடித்திருக்கிறேன். எல்லா நடிகைகளும், இது போலான ஒரு கேரக்டரில் நடித்திருக்க வேண்டும் என்றே நினைத்திருப்பார்கள். இதே போன்று இன்னொரு கேரக்டரை நான் எதிர்பார்க்க முடியாது. இதில் புடவை அணிந்து நடித்தேன். தெலுங்கு படங்களில் கிளாமர் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் புடவையிலேயே கிளாமராக காட்டியிருந்தார் கவுதம். அவருக்கு நடிகைகளை பிகினி போன்ற டிரெஸ்களின் காண்பிக்க விருப்பமில்லை. அது கிளாமரும் அல்ல.
இந்தப் படத்தையடுத்து, தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் ‘பிருந்தாவன்’, மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
Comments
Post a Comment