ஹீரோயின்களின் ஈகோ இந்த முறை மட்டை விளையாட்டு வீரர்களோடு நட்பை வளர்க்கிற வேலையில நகைக்கடை நடத்துற கவர்ச...
ஹீரோயின்களின் ஈகோ
இந்த முறை மட்டை விளையாட்டு வீரர்களோடு நட்பை வளர்க்கிற வேலையில நகைக்கடை நடத்துற கவர்ச்சி நடிகை இறங்கிட்டாராம்... இறங்கிட்டாராம்... சென்னையில நடந்த மட்டை விளையாட்டு போட்டிக்கு போனவரு, வீரர்களை நேர்ல சந்திச்சு அறிமுகப்படுத்திக்கிட்டாராம்... அறிமுகப்படுத்திக்கிட்டாராம்...
ÔவிஷபுரÕ பாம்பு படத்தை பாத்தவங்க படத்துல கவர்ச்சி இருந்தாத்தான் வியாபாரமாகுமுன்னு சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... மோனிக நடிகை, குளத்துல குளிக்க¤ற மாதிரி உடனே படம்புடிச்சாங்களாம்... புடிச்சாங்களாம்... அது போதாதுன்னு வினியோகஸ்தருங்க சொன்னாங்களாம். இப்போ எஸ்.எம்.எஸ். நாயகிய ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வச்சிருக்காங்களாம்... வச்சிருக்காங்களாம்...
ராஜ்ஜியம் செலுத்துற மன்மத படத்துல அஞ்சு ஹீரோயினுங்க நடிக்கிறாங்க. அஞ்சு பேருக்குள்ளேயும் ஈகோ பனிப்போர் தொடங்கி இருக்காம்... தொடங்கி இருக்காம்... ஷூட்டிங் ஸ்பாட¢ல, Ôஇந்த சீன்ல அவரை ஏன் நடுல நிக்க வைக்கிறீங்க. இந்த பாட்டு சீன்ல அவருக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் அதிகமா இருக்கேன்Õனு கேட்டு டைரக்டருக்கு தலைவலி கொடுக்கிறாங்களாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு யார் லேட்டா வர்றதுங்கிறதுலேயும் போட்டி நடக்குதாம்... நடக்குதாம்...
Comments
Post a Comment